ஊட்டியில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் வால்சம் பகுதியில் சாலைமறியல்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கேசினோ சதுக்கத்தில் இருந்து அலங்கார் தியேட்டர் செல்லும் வால்சம் சாலையில் குவிந்தனர்.
பின்னர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகிறது. தண்ணீர் வராததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகி றோம். எனவே தண்ணீர் வழங்க நடவடிக்கைஎடுக்க என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்து கிறோம் என தெரிவித்தனர்.
பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அதிமுக மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உடன் இருந்தார்
பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சு வர்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
No comments:
Post a Comment