நீரின்றி அமையாது உலகு பராமரிப்பின்றி நகராட்சி நிர்வாகம் பரிதவிக்கும் மக்கள்
நீலகிரி மாவட்டம் உதகை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஆதாரமாக விளங்கிவரும் லோயர் தொட்டபெட்டா ஏரியிலிருந்து ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2017 ஆம் ஆண்டு 2018 ஆம் ஆண்டு ரூபாய் 2720 கோடி 27 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் குன்னூர் செல்லும் ரோட்டில் சவுத் வீக் எதிரில் 100 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொள்ளும் வகையில் ராட்சத டேங்க் ஒன்றை கட்டினார்கள் லோயர் தொட்டபெட்டாவில் இருந்து ராட்சத பைப்புகள் மூலம் குடிநீரைக் கொண்டு வந்து அந்தக் குடிநீர் தொட்டியில் சேமித்து வைத்து உதகை நகரின் பல பகுதிகளுக்கு ஐந்து ஆறு வருடங்களாக குடிநீரை சப்ளை செய்து வந்தார்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் டேங்கின் நுழைவாயில் உள்ள குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியது தண்ணீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாக ஓடியது பிறகு பல மணி நேரம் கழித்து வந்த ஊழியர்கள் பல மணி நேரங்கள் போராடியும் உடைந்து வெளியேறியும் தண்ணீரை நிறுத்த முடியாமல் தவித்தார்கள் பிறகு லோயர் தொட்டபெட்டா சென்று அங்கிருக்கும் வால்வை நிறுத்தி விட்டு வந்து மீண்டும் பல மணி நேரம் போராடி அடைப்பை சரி செய்தார்கள் சரியாக பராமரித்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது நகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு குடிநீர் குழாய்களை சரியாக பராமரிக்க வேண்டுமாய் நீலகிரி மாவட்டம் தமிழகக் குரல் இணையதளச் செய்திகள் மூலம். கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகை தாலூக்கா செய்தியாளர் உ விஜயராஜ்.
No comments:
Post a Comment