கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை, பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தீர்வு காணப்படுமா? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 April 2024

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை, பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தீர்வு காணப்படுமா?

 



கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை, பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தீர்வு காணப்படுமா? ஏற்கனவே பணியில் இருந்த மருத்துவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், சுமார் 700 நோயாளிகள் தினமும் வந்து போகும் சூழ்நிலையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருக்கிறார். 

கோத்தகிரியை சுற்றியுள்ள கிராம மக்கள் தினக்கூலிகளாக உள்ள நிலையில்,தங்கள் அன்றாடப் பணிகளை விட்டு விட்டு மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர். இதனால் மன அழுத்தம் உண்டாவதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.காத்திருந்த நோயாளியான லஷ்மி பாட்டி கூறியதாவது காலையில் 10 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும், மதியம் ஒருமணி அளவில் தான் மருத்துவரை பார்க்க முடிந்ததாகவும், வரிசையில் நிற்க முடியாத அளவிற்கு மேல் கூட்டம் இருந்ததால் தன்னால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற முடியவில்லை என்று தெரிவித்தார். சென்ற வருடம் இதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று பலனடைந்த மேத்யூ என்ற இளைஞர் கூறுகையில் புது கட்டடம் வருவதற்கு முன் இங்கு பல மருத்துவர்கள் பணியில் இருநதனர்,ஆனால் மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்ட பின் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதாகவும்,தனது தாயாருக்கு சிகிச்சை பெற அழைத்து வந்த நிலையில் மருத்துவரை பார்க்க முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், ஒரு நாள் வீணாகி விட்டதாக கவலை தெரிவித்தார். இது தொடர்பாக கோத்தகிரி தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் இணை இயயக்குனரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியாமல் போனது.

 கோத்தகிரி அரசு மருத்துவமனை என்பது கோத்தகிரி சுற்றி உள்ள கிராமங்களுக்கும்,ஒரே தலைமை மருத்துவமனை. ஓரே ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவு,வெளிநோயாளிபிரிவு, அறுவைசிகிச்சை பிரிவு .பிரேத பரிசோதனை என்று அனைத்து பணிகளையும் கவனிப்பது என்பதும், பணியாளர்கள் பற்றாக்குறை என்பதும் நோயாளிகளுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. மருத்துவ துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?


 கோத்தகிரிலிருந்து தமிழக குரல் செய்திகளுக்காக நிருபர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad