ஊட்டியில் கலெக்டர் கோப்பைக்கான குதிரை பந்தயத்தில் 'சம்மர் சாங்' குதிரை வெற்றி பெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 April 2024

ஊட்டியில் கலெக்டர் கோப்பைக்கான குதிரை பந்தயத்தில் 'சம்மர் சாங்' குதிரை வெற்றி பெற்றது.




நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குதிரை பந்தயம் நடந்து வருகிறது. நேற்று காலை, 11.00 மணி முதல் மதியம், 2.00 மணி வரை மொத்தம், 7 பந்தயங்கள் நடந்தது.



'கலெக்டர்' கோப்பைக்கான குதிரை பந்தயமும் நடந்தது. அதில், 1200 மீ., இலக்கை நோக்கி, 10 குதிரைகள் ஓடின. 'சம்மர் சாங்' குதிரை, 1:16.54 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு பரிசு வழங்கப்பட்டது. திரளான சுற்றுலா பயணியர் குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மே முதல் வாரத்தில் முக்கிய பந்தயமான 'டர்பி' மற்றும் 'நீலகிரி தங்க' கோப்பைக்கான குதிரை பந்தயம் நடக்கிறது

No comments:

Post a Comment

Post Top Ad