நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள குஞ்சப்பனை சோதனை சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சமவெளிப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அடிவாரத்தில் நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யும் நிலையில் அதையும் மீறி சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கொண்டு சென்றால் குஞ்சப்பனை சோதனை சாவடியில் அபராதம் விதிப்பதுடன் ஆலோசனையும் வழங்கி அனுப்புகின்றனர்.
ஆகவே நீலகிரி மாவட்டம் வரும் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்குமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment