13.4.2024ம் தேதி அவினாசி பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து
உதகை-குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர-ஒன்றிய-பேரூர் செயலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை.
நீலகிரி மாவட்டம், உதகை-குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நகர-ஒன்றிய-பேரூர் செயலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகம், உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்தும், எதிர்வரும் 13.4.2024 அவினாசியில் கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ராஜூ, செந்தில் ரங்கராஜ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், பரமசிவன், லாரன்ஸ், பிரேம்குமார், நெல்லை கண்ணன், பீமன், பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, சத்தக்கத்துல்லா, காளிதாஸ், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ், சதிஷ்குமார், நடராஜன், சஞ்சீவ்குமார், ரமேஷ்குமார், சுந்தர்ராஜ், முத்து, காளிதாஸ், மார்டின், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராம்குமார், வெங்கடேஷ், ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், தலைமை கழக சொற்பொழிவாளர் முபாரக், மயில்வாகனம், மணி, சத்யநாதன், சண்முகம், சந்திரன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment