உலக இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மிகவும் சிறப்பு மிக்கது.இந்த மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்கள் உணவு உண்ணாமல் தங்களது இறை நம்பிக்கையினையும் ஈகை குணத்தையும் வெளிக்காட்டுவர், அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் பள்ளிவாசல் கமிட்டி சார்பாக மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் எங்கள் மக்கள் பிறப்பால் மட்டுமே வேற்று மதத்தினர் மற்றப்படி நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்று வாழ்ந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தினர்.இதில் நீலகிரி கூடலூர் பகுதி புகழ்பெற்ற மாரியம்மன் கோவில்,புனித மரியன்னை ஆலயம்,சி எஸ் ஐ ஆலைய நிர்வாகிகள்,சாதி மதம் பாராமல் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது மத ஒற்றுமையினை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் பல தரப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டது.கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள்,காவல் துறை அதிகாரிகளுக்கு மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் கமிட்டி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment