வளர்ப்பு எருமைகளால் உதகை சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 April 2024

வளர்ப்பு எருமைகளால் உதகை சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம்

 


நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள் ,வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 



இந்நிலையில் உதகையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது பார்க்கிங் வசதிகள் கிடையாது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகுந்த  சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாக காணப்படும் கமர்சியல் சாலையிலும் மிகுந்த போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில்   வளர்ப்பு  எருமைகளினால் போக்குவரத்து தடை படுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு வருகின்ற எருமைகள் இரவு 12 மணி வரை கமர்சியல் சாலை மற்றும் மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன. இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உடனே தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad