அருள்மிகு பெட்டதம்மன், ஶ்ரீ ‌சற்குருநாதர் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 April 2024

அருள்மிகு பெட்டதம்மன், ஶ்ரீ ‌சற்குருநாதர் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை

 


நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த திரு. மல்லா கவுடர் சுவாமிகள் அவர்கள் தங்கள் குழுவினருடன் பெட்டதாபுரம் மலைமேல் அமைந்துள்ள ஶ்ரீ பெட்டதம்மன் கோயில் வளாகத்தில்    

ஶ்ரீ சற்குருநாதர் ஸ்வாமிகள் அவர்களுக்கு சன்னதி அமைத்து பூஜை செய்துவருகின்றனர்.தொடர்ந்து 28 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமியில் சிறப்பு பூஜை செய்கின்றனர்.

இந்த ஆண்டு 23.4.2024 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு 10 மணிக்கு  ஶ்ரீ சற்குருநாதர் ஸ்வாமிகள் சன்னதியில் பஜனையுடன் தொடங்கிய பூஜை இரவு 11.30 மணிக்கு ஶ்ரீ ஹெத்தையம்மன் குடையுடன் ஶ்ரீ சற்குருநாதர் ஸ்வாமிகள் திருவுருவ  படத்துடன் ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ  ஶ்ரீ சற்குருவை கொண்டாடி பஜனை  பாடல் மற்றும் ஆடலுடன்  கொடிமரம் சுற்றி ஆஞ்சநேயர் சன்னதியில் பூஜை முடிந்ததும் படி பூஜை செய்து பக்திபரவசத்துடன் ஆடி பாடி படியேறி அருள்மிகு பெட்டதம்மன் சன்னதிக்கு வந்து அம்மன் மற்றும் சற்குருவிற்கு பூஜை செய்தனர்.கோயில் வளாகத்தில் பஜனை தொடர்ந்தது.

இரவு 12.15 மணிக்கு  சித்திரை மாத பவுர்ணமி நிலவு பெட்டதம்மன்  கோயிலின் நேர் மேல் வந்தவுடன்  கோயிலின் வலதுபுறம்  பவுர்ணமி நிலவு கண்ணாடியில் தெரியுமாறு அமைத்து கண்ணாடியில் தெரியும் சித்ரா பவுர்ணமி நிலவுக்கு முன்புறம் நெய்விளக்கு நல்லெண்ணெய் விளக்கு அமைத்து மூன்று தெய்வங்களுக்கு பூ‌ஜை செய்து அனைத்து பக்தர்களும் மூன்று தெய்வங்களை வணங்கினர்.

கடந்த 28 ஆண்டுகளாக  இந்த கோயிலில் சித்ரா பவுர்ணமி பூஜை செய்வதாகவும் இந்த விஷேச பூஜையால் பக்தர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடப்பள்ளி திரு. மல்லா கவுடர் சுவாமிகள் அவர்கள் கூறினார்கள்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு முழுவதும் பஜனை பாடல் மிக சிறப்பாக நடந்தது.விடியற்காலை 4.30 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ பெட்டதம்மன் சன்னதியில் இருந்து ஶ்ரீ ஹெத்தையம்மன் குடையுடன் ஶ்ரீ சற்குருநாதரின் திருவுறுவப்பட ஊர்வலம் ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் கொடிமரம் வழியாக ஶ்ரீ சற்குருநாதர் சன்னதியை அடைந்தது.

அந்த நேரத்தில் ஶ்ரீ சற்குருநாதர் சன்னதிக்கு நேர் மேலே‌ சித்ரா பவுர்ணமி நிலவு இருந்தது சிறப்பம்சமாகும்.மங்களப் பாடலுடன் காலை 5 மணிக்கு சித்ரா பவுர்ணமி பூஜை சிறப்புடன் நிறைவடைந்தது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad