ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருவிழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருவிழா

 


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரக்கூடிய ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவிலின் திருத்தேர் திருவிழாவானது கடந்த 19 4 2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது 




இந்த விழாவானது இன்றைய தினம் முதல் நாள் விழாவாக மாங்கல்யம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அம்மனின் அருள் பிரசாதமான அன்னதானமும் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் அம்மனின் ஆலயத்தில் திருவிளக்கு பூஜையானது நடைபெற உள்ளது...



நாளைய தினம் 22 4 2024 அன்று பூங்கரக ஊர்வலம் மற்றும் திருத்தேர் பவனி உலா மற்றும் பறவை காவடியுடன் ஊர்வலமாக கோத்தகண்டி மட்டம் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து அம்மனின் விழாவிற்கு வந்தடையுள்ளது பின்பொது பூஜை நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து அம்மனின் அருள் பிரசாதமான அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும்...




23 4 2024 அம்மனின் ஆலயத்தில் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களுக்கான மியூசிக்கல் சேர் உரியடி போன்ற விளையாட்டுகளுடன் துவங்க உள்ளது அதனை தொடர்ந்து மதியம் அம்மனின் அருள் பிரசாதமான அன்னதானமும் அதனைத் தொடர்ந்து பொது பூஜைகளும் நடைபெற உள்ளது...




24 4 2024 காலை சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து மாவிளக்கு பூஜை அம்மனின் பூங்கரகம் கங்கைக்கு குடி விடுதல் நிகழ்வும் நடைபெறுகிறது...


அதனைத் தொடர்ந்து 25 4 2024 காலை அம்மனின் ஆலயத்தில் மறு பூஜையும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும் அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா முனிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அலங்கார பூஜை அதனைத் தொடர்ந்து கிடாவெட்டு பூஜையும் மதியம் ஒரு மணி அளவில் அய்யனின் அருள் பிரசாதமான அன்னதானமும் வழங்கப்பட உள்ளதால் அனைத்து சுற்றுவட்டார பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு விழா கமிட்டியின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது அவர்களுடன் சேர்ந்து விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் வருக வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்....



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad