படுக சமுதாயத்தினர்களின் எத்தை அம்மனின் திருத்தேர் வீதி உலா நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயிலின் திரு தேரோட்டம் வருகின்ற 16.4.2024 செவ்வாய்க்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற உள்ளதால் தினம் தினம் ஒவ்வொரு சமூகத்தினர்கள் தங்கள் உபயங்களை செய்து வருகிறார்கள் அதைப்போல் இன்று எட்டு நான்கு 2024 திங்கட்கிழமை நீலகிரி மாவட்ட படுக சமுதாயத்தினர்களின் உபயம் நடைபெற்றது அதில் அவர்கள் வணங்கும் தெய்வமாகிய எத்தை அம்மனை அலங்கரித்து திருத்தேரில் மேள தாளங்களுடனும் ஆட்டங்களுடனும் எத்தை அம்மனை வீதி உலா கொண்டு சென்றார்கள் திருத்தேர் பவனி ஆனது லோயர் பஜார் வழியாக சென்று மின்சார வாரிய அலுவலகம் வழியாக வந்து மெயின் பஜார் வழியாக வந்து ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கம் ஒரு சென்று பின்பு கோயிலை வந்தடையும் இதன் மத்தியில் ஐந்து லாந்தர் பகுதியில் பாட்டுக் கச்சேரி களைகட்டியது.
நீலகிரி மாவட்ட. தமிழக குரல். இணையதள செய்திகளுக்காக. உதகை விஜயராஜ். நீலகிரி மாவட்ட. தமிழக குரல். இணையதள. செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment