நீலகிரி மாவட்டம் உதகை எமரால்டு அருகே உள்ள முள்ளிமந்து பகுதியில் பழங்குடியின மக்களான தோடர் மக்களிடம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
நிகழ்வில் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் ஆவின் பொது மேலாளர் மரு.ஜெயராமன் வாக்காளர் உறுதி மொழியுடன் நிகழ்வினை துவங்கி வைத்தார் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பிரவீனா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ( பொ) திருமதி ஷோபனா, உதவி திட்ட அலுவலர் திருமதி ஜெயராணி மகளிர் சுய உதவி குழுக்கள் உதவி திட்ட அலுவலர் மற்றும் தோடர் இன மக்கள் 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்போம் என தோடர் இன சார்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது
மேலும் தோடர் இன மக்களின் கலாச்சார நடனத்துடன், இசை நாற்காலி மற்றும் சிறு விளையாட்டுகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் 100% வாக்கினை பதிவு செய்வோம் என உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்
மேலும் அவர்கள் கூறுகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் நடைபெற்றால் அனைத்து பொதுமக்களும் வாக்களிப்பதன் மூலம் ஒரு நல்லதொரு மக்களாட்சி நமது இந்திய நாட்டில் உருவாக்க முடியும் என்று கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment