நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகரிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 April 2024

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகரிப்பு

 



உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா பகுதியாக நீலகிரி மாவட்டமாக திகழ்ந்து  வருகிறது. மாவட்டத்தில் பலதரப்பட்ட சுற்றுலா பகுதிகள் அமைந்திருக்கிறது. இதில் முக்கிய ஸ்தலமாக அரசு தாவரவியல் பூங்கா ,ரோஸ் கார்டன், தொட்டபெட்டா  போன்ற மிக முக்கியமான ஸ்தலங்கள் நகர பகுதியில் அமைந்துள்ளது.

 எனவே இப்பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வருகிறார்கள். இதனை உபயோகித்து விட்டு  சாலை ஓரங்களில் வீசி சென்று விடுகிறார்கள். மேலும் என் சி எம் எஸ் பார்க்கிங் தளத்திலும் இதுபோன்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும்  உணவு கழிவுகளையும் வீசி சென்று விடுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும்  தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு எழுந்துள்ளது.



மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை.


 

இதனை அனைத்து அரசு துறை அலுவல கங்களும் கண்கா ணித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்கிறார்கள். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad