ஊட்டியிலேயே வியர்த்து கொட்டுது.. 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான வெயில் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 April 2024

ஊட்டியிலேயே வியர்த்து கொட்டுது.. 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான வெயில்

 


ஊட்டியிலேயே வியர்த்து கொட்டுது.. 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான வெயில்! வானிலை மையம் ஷாக்!தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. ஊட்டியில் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகியிருப்பதாகவும், கடந்த 73 ஆண்டுகளில் இப்படி வெப்பம் பதிவாகவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த 1951ம் ஆண்டு இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது என்றும், அதன் பின்னர் 73 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் வெப்பம் உச்சத்தை தொட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறது.            இந்நிலையில் இன்று உதகையில் உள்ள மின்சாதன விற்பனை கடைகளில் மின்விசிறிகளை வாங்க உள்ளூர்வாசிகள் இருந்ததைக் கண்கூடாக பார்க்க முடிந்தது.


இதனால் கடந்த 73 ஆண்டுகளில் ஊட்டி இன்றுதான் மிக வெப்பமான நாளை எதிர்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்

No comments:

Post a Comment

Post Top Ad