பந்தலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 April 2024

பந்தலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்

 


பந்தலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.


நீலகிரி மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு, மகாத்மா காந்தி பொது சேவை மையம், கேபீடிஎல் பவுண்டேஷன், ஆல் த சில்ரன், நெல்லியாளம் நகராட்சி ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார்.


ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி ராஜா, சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக்

ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நகராட்சி  துப்புரவு ஆய்வாளர் மலர்க்கொடி (பொ)ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.


காசநோய் குறித்து காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் மோனிஷா பேசும்போது காசநோய் காற்றின் பரவும் தன்மையுடையது. நாம் சுவாசிக்கும் காற்றில் டிரிபோ குளோசிஸ் கிருமிகள் நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். தூய்மை பணி மேற்கொள்ளும்

சுகாதார சார்ந்த பணியாளர்கள் பல்வேறு பகுதிக்கு சென்று வரும் போது காசநோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் சளி இருமல் மற்றும் உடல் எடை குறைவு இருந்தாலோ காசநோய் இருப்பதற்கான அறிகுறியாக காணப்படும். கூடலூர் பகுதி காசநோய் அதிகம் பாதிக்கபட்ட பகுதியாக உள்ளது. எளிய சோதனை மூலம் காசநோய் கண்டறியப்படும். காசநோய் இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.  அனைத்து மருத்துவமனைகளிலும் சளி பரிசோதனை மேற்கொண்டு வரப்படுகிறது என 

விளக்கம் அளித்தார். 


தொடர்ந்து காசநோய் பிரிவு பணியாளர்கள் மோனிஷா ஆயிஷா, நிர்மலா, ராம் உள்ளிட்ட குழுவினர் காசநோய் பரிசோதனை மேற்கொண்டனர். 


நிகழ்ச்சியில்  நகராட்சி தூய்மை பணியாளர்கள்  மற்றும் பொதுமக்கள் உட்பட 50க்கும மேற்பட்டோருக்கு காசநோய் உள்ளதா என்பதற்கான எக்ஸ் ரே மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ள பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad