நீலகிரி மாவட்டம் கூடலூர் 2-ம் மயில் பகுதியில் இந்திய கூட்டணி , திமுக பாராளுமன்ற வேட்பாளர் ஆ ராசா தேர்தல் பிரச்சாரம்..
விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ புகழேந்தி மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்திய பிறகு ஆ ராசா தேர்தல் பிரச்சாரம்...
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக நீலகிரி பாராளுமன்ற வேட்பாளராக தமிழக முதல்வரால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளேன்.
மூன்றாண்டு கால ஆட்சியில் கொரோனா உச்சகட்டத்தில் இருந்த பொழுது கொரோனாவை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து.
கொரோனாவால் முடங்கி கிடந்த மக்களுக்கு குடும்ப அட்டைக்கு 4,000 ரூபாய் வழங்கி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 அதையும் வழங்கிக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கிக் கொண்டிருக்கின்ற கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்கு அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் இப்படி ஏராளமான நலத்திட்டங்களை புதிய புதிய கல்லூரிகள் கட்டிடங்கள், தார் சாலைகள் பாலங்கள் பள்ளிக்கூடங்கள், வெளிநாடுகளுக்கு சென்று 8 லட்சம் கோடி முதலீடுகளை பெற்று.
புதிய புதிய தொழிற்சாலைகள் வேலைவாய்ப்புகள் இப்படி எல்லா தரப்பிலும் நம்பர் ஒன் முதலமைச்சராக இருக்கின்ற முதலமைச்சர் அவர்கள் இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே எடுத்து வைத்திருக்கும் கோசம்
நாட்டைக் காக்க இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்.
இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். அப்படி என்றால் இந்தியா பாதுகாப்பாக இல்லை. இந்தியா இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் சீக்கியர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு துணை கண்டம் அதேபோல தமிழ்,மலையாளம், ஒரியா மணிப்பூரி,பெங்காலி இந்தி, உருது, ஏகப்பட்ட மொழிகளை கொண்ட ஒரு துணை கண்டம் இதனுள் உள்ள வேறுபாடுகளை அங்கீகரித்து இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்ற தான் அரசியல் சட்டம்.
அந்த அரசியல் சட்டம் இது ஒரு ஜனநாயக நாடு என்றும் மதச்சார்பற்ற நாடு, சமதர்ம நாடு இந்த மூன்றையும் அழித்துவிட்டு... ஒற்றை ஆட்சி ஒற்றை மதம் ஒற்றை மொழி என்று ஒற்றைத் தன்மையை கொண்டு வந்து அதற்காக பல கோடி ரூபாய் . தேர்தல் பத்திரம் வரைக்கும் ஊழல் செய்திருக்கின்ற மோடியை மதவாதமும், ஊழலும் தடுக்கப்பட வேண்டும் என்றால் வீட்டுக்கு அனுப்புவது தான் வேலை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment