நீலகிரி மாவட்டத்தில் 06.04.24 அன்று மடித்தொரை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80 வது ஆண்டு விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் திரு சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கினார். ஆசிரியை திருமதி. அருந்ததி ஆசிரியை திருமதி கோகிலா ராணி, சமையலர் திருமதி செல்வி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி மல்லிகா, அவர்கள் விழாவின் ஏற்பாட்டை சிறந்த முறையில் செய்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உதகை வட்டார கல்வி அலுவலர் திரு கார்த்திக், அவர்கள் கலந்து கொண்டார். மாணவர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மாணவர்களின் தனி திறமைகளை வெளிகொணரும் வகையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஊர் தலைவர் போஜன் அவர்கள் கல்வி மட்டுமே சிறந்தது கல்வி மட்டுமே கடைசி வரைக்கும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கைகொடுக்கும் என்று பேசினார். இவ்விழாவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை சிறப்பு விருந்தினர் அவர்கள் வழங்கினார். மற்றும் மடித்தொரை கிராம மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment