கேரட் லாரிகளில் பயணம் தொடரும் அத்துமீறல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

கேரட் லாரிகளில் பயணம் தொடரும் அத்துமீறல்

 



கேரட் லாரிகளில் பயணம் தொடரும் அத்துமீறல் 

நீலகிரி மாவட்டம் உதகையில் மலை காய்கறிகள் அதிக அளவு பயிரிடப்படுகிறது இதில் உருளைக்கிழங்கு, கேரட், மற்றும் பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற பல வகையான பயிர்கள் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் கேரட் போன்ற காய்கறிகளை அறுவடை செய்வதற்காக மாவட்டத்தின்   பல்வேறு பகுதியில் இருந்து ஆட்கள்  காலை 3 மணியளவில் சென்று விடுகிறார்கள். உள்ளூர் மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் கேரட் அறுவடை செய்வதற்காக அதிக அளவில் வருகிறார்கள்.

 இப்படி அறுவடை செய்த கேரட்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு அதை சுத்தம் செய்வதற்காக கால்வாய்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது லாரிகளில்  மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மூட்டையின் மீது பணியாட்களை அமர்த்திக் கொண்டு மிகவும் ஆபத்தான பயணங்களை லாரி ஓட்டுனர்கள் மேற்கொள்கிறார்கள் ஏற்கனவே இதன் மூலம் இரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை கண்டித்தும் காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் இது போன்ற செயல்கள் மீண்டும் மீண்டும் தொடர்கிறது. எனவே இது போன்ற ஆபத்தான பயணத்தை இனி மேலும் தொடரக்கூடாது என்பதை காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் , சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள். 

தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட புகைப்பட கலைஞர் N. வினோத் குமார் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad