உதகையில் உள்ள உலகப்புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். வருடம் தோறும் மே மாதத்தில் நடைபெறும் மலர்கண்காட்சி ஐந்து நாட்களுக்கு நடைபெறும். அந்த ஐந்து நாட்களில் உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். பூங்காவில் பல வண்ண மலர்களும் அரியவகை மரங்களும் மூலிகை செடிகளும் அதிக அளவில் உள்ளன. இப் பூங்கா இயற்கையாக அமைந்த பூங்காவாகும். எனவே வருகின்ற மே மாதத்தில் நடைபெறவிருக்கும் மலர்கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள ஊழியர்கள் பூச்சட்டிகளில் மண்களை நிரப்பி சீர் செய்து செடி நட்டு பராமரித்து வருகின்றனர். இப் பூங்காவில் உள்ள புகழ்பெற்ற புல் மைதானத்தையும் சீரமைத்து வருகிறார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment