இந்த வருடம் ரோஜா கண்காட்சி நடக்குமா? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 April 2024

இந்த வருடம் ரோஜா கண்காட்சி நடக்குமா?

  



நீலகிரி மாவட்டம் உதகை  நகரின் மேற்குப் பகுதியில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள ரோஜா பூங்கா 1995 ஆம் ஆண்டு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் ஆணையிடப்பட்டு  உருவாக்கப்பட்டது தான் ரோஜா பூங்கா அதற்கு முன்பு தோட்டக்கலை துறையால் விவசாய நிலமாக பராமரிக்கப்பட்டு வந்த பூமி அது  அதன் பிறகு ரோஜா பூங்காவாக மாற்றப்பட்டு பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.வருடம் முழுவதும்  அளவுக்கு அதிகமாக மலைகளின் அரசி என்று அழைக்கப்படும்  சுற்றுலாத்தலமாகிய நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து மழை இல்லாத காரணத்தினால் மலர்களை சரியாகப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



20  25 வருட காலங்களாக வற்றாது  இருந்த  கிணறும் தற்போது குறைவான  நீருடன் காணப்படுகிறது எனவே பூங்காவில் உள்ள மலர்களை பராமரிக்க பாதுகாக்க தண்ணீரை வெளியில் இருந்து பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் இந்த வருடம் ரோஜா மலர்களின் கண்காட்சி இருக்குமா இருக்காதா என்று ரோஜா பூங்காவை பராமரிக்கும் பராமரிப்பாளர்களும் வேலையாட்களும் கூறுகிறார்கள் ரோஜா மலர் கண்காட்சி இருக்குமா இருக்காதா நடக்குமா நடக்காதா என்று வருகிற மே மாதம் தான் தெரியும் என்று கூறுகின்றார்கள் .


தமிழக குரல் செய்திகளுக்காக உதகை  செய்தியாளர் விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல்  இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad