கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் கழிவு நீர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 April 2024

கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் கழிவு நீர்



 நீலகிரி மாவட்ட  உதகை நகரில் உள்ள நொண்டி மேடு 33 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீ பொக்கபுரம்மாரியம்மன் திருக்கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் மலத்துடன் கலந்த கழிவு நீர் கழிவுநீர் செல்லும் தொட்டி அடைப்பட்டு தொட்டியில் இருந்து கழிவு நீர் பக்தர்களும் பொதுமக்களும் நடக்கும் நடைபாதையில் ஓடி நுர்நாற்றம்  வீசிக் கொண்டிருக்கிறது இதனால் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினரை கவுன்சிலர் அவர்களை அணுகி முறை  இட்டதற்கு அவர் நகராட்சி பணியாளர்களை அழைத்து வந்து அடைப்பை சரி செய்தார் சரி செய்த பிறகு மீண்டும் மீண்டும் அடைப்பட்டு கழிவு நீர் ரோட்டில் தான் ஓடுகிறது பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் அன்றாடம பயன்படுத்தும் பாதையில் முகத்தை சுழித்துக் கொண்டும் மூக்கை மூடிக்கொண்டும்   செல்கிற அவல நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது இதனை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் 33 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் தலையிட்டு இதற்கு நல்லதொரு தீர்வை தருமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக தமிழக குரல்  நீலகிரி மாவட்ட இனையத்தள செய்தி பிரிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம்  .



தமிழக குரல்  செய்திகளுக்காக  உதகை தாலுகா செய்தியாளர் விஜயராஜ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad