நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் என்ற கருத்துக் கணிப்பின் முடிவு வெளியீடு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 April 2024

நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் என்ற கருத்துக் கணிப்பின் முடிவு வெளியீடு...

நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் என்ற கருத்துக் கணிப்பின் முடிவு வெளியீடு...
        
  உலகளாவிய தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் எண்ணத்தோடு உதயமான நமது குரல் நமக்கான குரல் என்னும் வாசகத்தோடு உருவான தமிழக குரல் இணையதள செய்தி குழுமம் நீலகரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பினை கடந்த 10 தினங்களாக சமூக வலைத்தளங்களில் வாசகர்களிடம் இணையதள வாயிலாக எடுக்கப்பட்டது.

         இந்த கருத்துக்கணிப்பில் முதலாவது இடத்தை பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரு எல் முருகன் அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த இந்தியா கூட்டணியின் வேட்பாளர் திரு ராசா அவர்களும் முதல் இடம் மாறி மாறி பிடித்துக் கொண்டிருக்கின்றனர் வியப்பு என்னவென்றால் இதுவரையிலும் யாருடைய பெயர் முதலிடம் என்பதை நம்மால் கணிக்க முடியவில்லை ஏனெனில் இருவரும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே முன் பின் வருகின்றனர் ஆகவே நீலகிரி மாவட்டத்தில் ஒரு பலத்த இருமுறை போட்டி நடைபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை 


        அந்த போட்டி நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு பலத்த போட்டியாக தான் இருக்கும் இவர்களின் வாக்கு சதவீதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே ஏறி இறங்கி கொண்டிருக்கின்றது தவிர ஒரு குறிப்பிட்ட சதவீதம் யாரும் முன்னர் வரவில்லை ஒரு சதவீதத்திற்கு குறைவாக புள்ளி பூஜ்ஜியம் கணக்கில் இவர்களின் ஏற்றம் இறக்கம் உள்ளதால் இவர்களின் வெற்றி வாய்ப்பு யாருக்கு என கருத்துக் கணிப்பு செய்ய முடியாது எனவே நீலகிரி மாவட்டத்தில் ஒரு பலத்த போட்டி இந்த இரு வேறு கட்சிகளுக்கும் நடக்கும். 

         மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கும் ஒரு பிரதமர் வேட்பாளர் இல்லாதது அவர்களது பின்னணிக்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது 

     என தமிழக குரல் இணையதள வாசகர்களும் நீலகிரி மாவட்ட பொது மக்களும் கொடுத்த கருத்துக்கணிப்பின் மூலம் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் கருத்துக்கணிப்பு முடிவினை தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் வாயிலாக நீலகிரி மாவட்ட தமிழக குரல்   இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Post Top Ad