உதகையில் கடும் வெயில் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 27 April 2024

உதகையில் கடும் வெயில்

 


நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அளவுக்கு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் வெளியூர்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் கேரளா கர்நாடகா மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் குளிர்ந்த  சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.



காலையில் சுற்றுலா பயணிகள் சென்று சுற்றி பார்த்துவிட்டு மாலையில் வரும் பொழுது வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன மேலும் உதகை நகரின் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் ஊர்களிலும் வனங்களிலும் புற்கள் மற்றும் செடிகள் மரங்கள் பெரும்பாலும் காய்ந்து காணப்படுகின்றன.

செடிகள் கொடிகள் மரங்கள் காய்ந்து காணப்படுவதால் விஷமிகள் யாராவது ஒரு சிறு நெருப்பு வைத்தால் கூட வனமே அழியும் சூழ்நிலை உருவாகி உள்ளது. வனத்தில் நீர் இல்லாததால் வனவிலங்குகள் ஊருக்குள் வரும் நிலை உருவாகியுள்ளது கடந்த இரண்டு நாட்களாக உதகை மேட்டுச்சேரி பகுதியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியின் மைதான வளாகத்தில் இரண்டு நாட்களாக  இரவில் சிறுத்தை ஒன்று நடமாடிக் கொண்டிருக்கிறது என்றும் அதை சிசி டிவி கேமராவில் பார்த்தோம் என்றும் பள்ளியின் ஆசிரியர் அலெக்சாண்டர் அவர்கள்  கூறினார்.

 மேலும் உதகையில் அளவுக்கு அதிகமான வெயிலின் தாக்கத்தால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது உதகை நகரில் உள்ள 36  வார்டுகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கும் பல ஏரிகளின்  நீர்நிலைகள் குறைந்து காணப்படுவதாக உதகை நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கடந்தபல மாதங்களாக மழை இல்லாத காரணத்தினால் நீர்நிலைகள் குறைந்து கொண்டே வருகிறது இதே நிலை தொடருமானால் ஆனால் குடிநீர் பஞ்சம்  வரும் என பொதுமக்கள்தெரிவிக்கிறார்கள்.

 நீலகிரி மாவட்ட தமிழகுரல்இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் தமிழகுரல் இனையத்தள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad