எமரால்டு 3 அடி பாலம் பகுதியை சிறுத்தை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 April 2024

எமரால்டு 3 அடி பாலம் பகுதியை சிறுத்தை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சம்

 



எமரால்டு 3 அடி பாலம் பகுதியை சிறுத்தை கடந்து செல்லும் காட்சி, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.வனத்துறை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், சுமார் 60 சதவீதம் வனப்பகுதிகளை உள்ளடக்கியது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.




ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட எச்.பி.எப், கலெக்டர் குடியிருப்பு, ரோஸ்மவுண்ட், எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. 

 இந்திரா நகர், பெரிய பிக்கட்டி ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி உலா வந்து செல்கின்றன. 

இந்த நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு எமரால்டு 
3 அடிபாலம் பகுதியில்
சிறுத்தை புலி நடமாட்டம் காணப்பட்டது 

பொதுமக்கள் தேயிலை தோட்ட பணியாளர்கள் விவசாய வேலை செய்பவர்கள் கால்நடை வளர்பவர்கள் அந்த வழியாக வேலைக்கு செல்பவர்கள், மற்றும் வட மாநில தொழிலாளர்கள் குளிக்க துவைக்க செல்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கும் மாறு கேட்டு கொள்ளபட்டது 

சிறுத்தை  கடந்து செல்லும் காட்சி, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அந்த பகுதிகளில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணித்து, அதனை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என் வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad