நடந்து முடிந்த தேர்தல் : நீலகிரியில் மக்கள் ஆர்வம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 April 2024

நடந்து முடிந்த தேர்தல் : நீலகிரியில் மக்கள் ஆர்வம்

 


ஜனநாயகத் திருவிழா பரபரப்பான பாராளுமன்றத் தேர்தல் 19 4 2024 வெள்ளிக்கிழமை,நீலகிரி பாரளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பல ஊர்கள், கிராமங்கள் நகரங்கள் மற்றும் தாலுகாக்களில் காலை 7:00  மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஏழு மணிக்கு முன்னரே வந்து காத்திருந்து வாக்குகளை பதிவுசெய்து  விட்டு  சென்றார்கள்  அநேக வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களுடைய பெயர்கள் இல்லாததால் அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் திரும்பி சென்றார்கள் அதுமட்டுமல்ல  பூத் ஸ்லிப்  மட்டும் கொண்டு வந்தவர்களை  தேர்தல் அதிகாரிகள் ஏதாவது ஒரு ஆவணங்களை எடுத்து வருமாறு கூறினார்கள் எடுத்து வர அநேகர்  சென்றார்கள் ஒரு சிலரே திரும்பி வந்து வாக்கு பதிவு செய்துவிட்டு சென்றார்கள் உதகை நகரில் 36 வார்டுகளை கொண்ட வாக்குச்சாவடிகளில் நகரங்களிலும் மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளிலும்  சிலருக்கு வாக்குகள் இல்லை என்று அதிகாரிகளிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.அநேக வார்டுகளில் 80 சதவீதத்துக்கு குறைவான  வாக்குகளே பதிவாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தார்கள் இந்த  தேர்தலில் முதல் முதலாக தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்று வந்தவர்கள் உற்சாகத்துடன் வாக்களித்து விட்டு சென்றார்கள்.

 நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad