நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவின் சிறப்புகள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவின் சிறப்புகள்.

 


நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கடைசியாக அடைக்கலமாகும் இடம் ஊட்டி  தாவரவியல் பூங்கா என்பது தனிசிறப்பாகும்.

கடந்த 1847-ம் ஆண்டில் 55 ஏக்கர் பரப்பில் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இப்பூங்காவில் முதன்முதலில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டன. காலப்போக்கில் உலகில் உள்ள அரியவகை மரங்கள், தாவரங்கள், மலர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷமாக மாறியுள்ளது. இப்பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. இவற்றை தவிர 127 வகை பெரணிகள் (பூ தாவரம்), ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் வகைகள் உள்ளன.

இந்த பூங்காவில் இத்தாலியன் கார்டனும் உள்ளது. இத்தாலிய பாரம்பரியத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கார்டன்  சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கிறது.

கடந்த 1845ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்காவில், 120 குடும்பங்களைச் சேர்ந்த 3000 ரக தாவர இனங்கள் உள்ளன. 144 ரக பெரணிச் செடிகள், 350 வகை ரோஜா, 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிச்செடிகள், "டைனோசர்' கால "ஜிங்கோபைலபா' மரம் என  ஏராளமான மர வகைகள் உள்ளன.

மேலும் இப்பூங்காவில் அமைந்துள்ள தட்பவெட்ப நிலையானது வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். 

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை காணாமல் செல்வது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்த மறுநாளே சுற்றுலா பயணிகள் ஊட்டியை நோக்கிபடை எடுத்ததால் ஊட்டி முழுவதும் வாகன நெரிசலாக காணப்பட்டது. 

ஊட்டி தாவிரவியல் பூங்காவில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட புகைப்பட கலைஞர் N. வினோத்குமார் மற்றும் தமிழக ‌குரல்‌ நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad