தனியார் ஆக்கிரமிப்பு தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 April 2024

தனியார் ஆக்கிரமிப்பு தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

 


தனியார் ஆக்கிரமிப்பு தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்.    40 வருடங்களுக்கு மேலாக. பழைய நகராட்சி மார்க்கெட். மணிகூண்டு பகுதியில்.     இயங்கி வருகிற. ஆட்டோ  ஸ்டேண்டை. தனியார் ஓட்டலும் தனியார் மருந்து கடையும். கடந்த இரண்டு வருடங்களாக ஆட்டோ களை நிறுத்த விடாமல்.     ஆட்டோக்களை நிறுத்தியது வந்த இடங்களை. ஆக்கிரமித்துக் கொண்டு தாங்கள் சுயநலத்திற்காக. காவல்துறையினர்கள் பயன்படுத்தும்     போரி கார்டுகளில். தங்கள் கடைகளின் பெயர்களை  ஸ்டிக்கர்களில் அச்சடித்து ஒட்டி வைத்துக் கொண்டுள்ளார்கள்.  இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.  பலமுறை சென்று கேட்ட பொழுதும். செவி சாய்க்காமல் அந்த போரி  கார்டுகளை. அந்தந்த இடத்திலேயே வைத்துக் கொண்டு. ஆட்டோ க்களை நிறுத்த விடாமல் இடையூறு செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த இடத்தில் இரண்டு சக்கர  வாகனங்களின் நிற்க அவர்களே  அனுமதித்திருக்கிறார்கள். இதனால் தினம் தினம். தங்களின் வாழ்வாதாரத்திற்காக. ஆட்டோக்களை ஓட்டி. பிழைப்பு நடத்தி  வரும் ஆட்டோ ஓட்டுநர்களும். உரிமையாளர்களும். ஆட்டோக்களை நிறுத்த இடம் இல்லாமல் தவித்து வருகின்றார்கள். எனவே காவல்துறையினர் தயவுகூர்ந்து. இந்த தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய மாதிரி ஆட்டோக்களை நிறுத்த. உதவிடுமாறு. ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும்  உரிமையாளர்கள் சார்பாக. கேட்டுக்கொள்கிறோம். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக. உதகை செய்தியாளர் விஜயராஜ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad