உப்பட்டி அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 April 2024

உப்பட்டி அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 



உப்பட்டி அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாற்று முறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆல் தி சில்ட்ரன் அமைப்பு, மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி மைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் தலைமை தாங்கினார் 

மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவசாத், ஆல் த சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்,ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது தற்போதைய சூழலில் நீர் பற்றாக்குறை காரணமாகவும் நிலக்கரி, யூரேனியம் உள்ளிட்ட இதர எரிபொருட்களின் பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.  அதுபோல பொதுமக்களின் மின் சக்தி நுகர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்நிலையில் எரிசக்தி பயன்பாட்டில் மாற்று சூழல்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளோம். இதன் அடிப்படையில் சோலார் மின்சக்தி உற்பத்தியில் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் எந்தவித செலவு என்று மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். அதற்காக அரசு மானியமும் வழங்கி வருகிறது இவற்றை 5 ஆண்டுகள் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் போதுமானது. அதுபோல சோலார் தெரு விளக்குகள் விவசாயத்திற்கான சோலார் நீர் மோட்டார்கள் உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுபோல இயற்கை கழிவுகள் மூலமும் எரிவாயு தயாரிப்பு மேற்கொள்ள முடியும் என்றார். 

நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி மைய பயிற்றுநர்கள் துரைசாமி, நவ்ஷாத் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திபிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad