நீலகிரியில் மே 10 முதல் 20 ஆம் தேதி வரை மலர்கண்காட்சி . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 April 2024

நீலகிரியில் மே 10 முதல் 20 ஆம் தேதி வரை மலர்கண்காட்சி .

 



நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காரணமாகவும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால் அரசு சம்மந்தமான அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளும் படி கோடை விழா இருக்கும்.

அரசியல் தலைவர்கள் முன்னின்று நடத்தும் விழாக்கள் நடைபெறாது.

இந்தநிலையில் மே17 அன்று மலர்கண்காட்சி இருக்கும் என உத்தேசமாக அறிவித்திருந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா அவர்கள் நீலகிரியில் தற்போது நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு மே 10 முதல் 20 ஆம்தேதிவரை உதகையில் மலர்கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவித்தார். நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளை கேட்டுக்கொண்டார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.  கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad