ஊட்டியில் அம்மன் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 April 2024

ஊட்டியில் அம்மன் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.


ஊட்டியில் அம்மன் கோயில் தேரோட்டம்  சிறப்பாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று நகரின் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தேரோட்டம் 16 .4. 2024. செவ்வாய்கிழமை மதியம் 2 மணி அளவில் நீலகிரி மாவட்ட ஆட்சியரும் மற்றும்  காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும் பக்த  கோடிகளும் பொதுமக்களும் அம்மனின்  திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

 கட்டுக்கடங்காத கூட்டங்களின் நடுவே மக்கள் வெள்ளத்தின் நடுவே தேர் சிறிது சிறிதாக நகர்ந்து சென்றது  அம்மனின்  திருத்தேரை மலர்களாலும் வண்ண  வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரித்து இருந்தார்கள் . தேரின் மத்தியில் அம்மன் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார் .

அம்மனின் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு சங்கத்தினர்கள்  பக்த கோடிகளுக்கு  அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்கள் இதில் பல சங்கங்கள் தனித்தனியாக  உணவு  தயார் செய்து இருந்தார்கள் .

உதகை லோக்கல்  லாரி உரிமையாளர்கள் மற்றும்  ஓட்டுனர்களின் சங்கம், கேரட் பாரம் தூக்கும்  தொழிலாளர்களின் சங்கம் , நீலகிரி மாவட்ட பெயிண்டர்கள் முன்னேற்ற சங்கம் , பிளம்பர்கள் சங்கம் மற்றும் நீலமலை நீலகிரி இங்கிலீஷ் காய்கறி வியாபாரிகள் சங்கமும் தனித்தனியாக வெகு விமரிசையாக அன்னதானப் பெருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தார்கள்.

 காலையில் 11 மணி அளவில் ஒரு சில இடங்களில் கடும் வெயிலுக்கு  ஏற்றவாறு  பக்த கோடிகளுக்கும் பொது மக்களுக்கும் நீர் மோரை வழங்கி உபசரித்தார்கள் .

தமிழக  குரல்  செய்திகளுக்காக உதகை தாலூக்கா செய்தியாளர்  விஜயராஜ் மற்றும் தமிழக குரல்  நீலகிரி  மாவட்ட இணையதள செய்திப் பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad