நாளை மறுநாள் உதகையில் தேரோட்டம் : தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் வெகு விரைவாக நடைபெறுகிறது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

நாளை மறுநாள் உதகையில் தேரோட்டம் : தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் வெகு விரைவாக நடைபெறுகிறது

நீலகிரி   மாவட்டம் உதகை  நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன்   திருக்கோயிலின்    தேரோட்டம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற  உள்ளதால் தேரோட்டத்திற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும்  தேரை அலங்கரிக்க அதிகமாக பயன்படுத்தப்படும் வேப்பிலை இன்று வாகனத்தில் வந்து சேர்ந்தது மேலும் அலங்காரத்திற்கு தேவையான மலர்களை நாளை காலையில் கொண்டு வந்து தேரின் வேலைகளை முடித்த பின்னர்  அம்மனின்  தேரை அலங்கரித்து நிறுத்துவார்கள். மறுநாள் செவ்வாய்க்கிழமை  அன்று தேரோட்டம் தொடங்கும் பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகள் வந்து அம்மனை தரிசித்து  ஆசி பெற்றுச் செல்வார்கள்.

நேற்று ஒரு சில வியாபாரிகள் கடைகளை போட்டிருந்தார்கள் இன்று கடைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் தங்களுக்கு   ரோட்டு ஓரங்களில் இடம்பிடிக்க சுண்ணாம்பு கட்டியை கொண்டு அளவிட்டு கடைகளை போடுவதற்காக இடங்களை பிடித்து வைத்துக் கொண்டுள்ளார்கள் .


தமிழக குரல் செய்திகளுக்காக உதகை  தாலூகா செய்தியாளர் விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக  குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad