குன்னூர், கோத்தகிரியில் கோடை மழை கொட்டியது. ஊட்டி நகர் பாலைவனமாகிறதா? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

குன்னூர், கோத்தகிரியில் கோடை மழை கொட்டியது. ஊட்டி நகர் பாலைவனமாகிறதா?

நீலகிரி மாவட்டத்தில் எல்லா ஆண்டுகளிலும் நவம்பரில் அதிக மழைப்பொழிவு  மற்றும் இயற்கை பேரிடர் காலமாகவும் இருக்கும்.

டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டவுடன் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

மார்ச் மாதத்தில் ஒரு கோடை மழை பெய்யும் அந்த மழையின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டம் பச்சைபசேலென மாறும்.
கோடையில் சமவெளியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு  கோடை விடுமுறை உள்ளதால் மே மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கொண்டாடப்படுவதாலும் கோடை மழைத்தூரலுடன் குளு குளு காலநிலையை அனுபவிக்க   தழிழகம், கேரளா , கர்நாடகா , ஆந்திரா உட்பட  வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகளும் ஊட்டிக்கு குடும்பத்துடன் வருவார்கள்.
இந்த ஆண்டு கோடை மழை மார்ச்சில் பெய்யாத நிலையில் ஏப்ரல் மாதத்தில் நீர் நிலைகள் வறண்டதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது கோடை விவசாயம் பாதித்தது
வறட்சி காரணமாக கால்நடைகள் மிகவும் சிரமப்பட்டது இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டது, புது மரக்கன்றுகள் நடாதது, கட்டிடங்கள் அதிகரிப்பு  புவி வெப்ப அதிகரிப்பால் மழை பொழிவு குறைவு ஆகிய காரணங்களாலும் இதே நிலை நீடித்தால்  மலை மாவட்டம் சமவெளிப்பகுதிபோல் ஆகிவிடும் என்று கவலைப்பட்ட  நிலையில்  வருண பகவான் கருணையால்‌ கடந்த மூன்று நாட்களாக இரவில் கோத்தகிரி பகுதி குன்னூர் பகுதிகளில் கோடை மழை பெய்தது .

ஊட்டி நகரில் இன்று வரை கோடை மழை ஒரு துளிகூட இல்லை ஆகவே உதகை நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து நகரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில்  நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு  சென்றதுடன் நீர் நிலைகள் வறண்டது அனைத்து அணைகளும் வறண்டதினால் மாவட்டத்தில்  உள்ள எல்லா நீர் மின் நிலையங்களும் மின்சார உற்பத்தியை நிறுத்தியது .
லாட்ஜ்  மற்றும் காட்டேஜ் நிர்வாகத்தினர் தனியார்  தண்ணீர் வாகனங்கள் மூலம்  அதிக பணம் கொடுத்து நீர் பெற்று சமாளிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் பாலைவனமாவதை தடுப்பது உள்ளுர் மக்கள் , சுற்றுலா பயணிகள் மற்றும் அரசு கையில் உள்ளது.

தமிழக குரல் செய்திகளுக்காக  நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள  செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad