நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த வழக்கில் மூன்று ஆயுள் தண்டனையை வழங்கி உதகை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.....
நீலகிரி மாவட்டம் கூடலூர் சாலையில் ஒன்பதாவது மைல் கக்கோடி வந்து பகுதியைச் சேர்ந்த ரஜினிஸ் குட்டன் (த.பெ நெடுகாஸ் குட்டன்) இவரும் மணி என்பவரும் ஒன்றாய் பணிபுரிந்து வந்தனர் இதில் ரஜினிஸ் குட்டன் மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளவர் பணியின் போது ரஜினிஸ் குட்டன் மது அருந்தியும் போதை வஸ்துக்களை பயன்படுத்தியும் வந்ததால் மணி கண்டித்துள்ளார் இதனை அடுத்து மணியை பழிவாங்கும் நோக்கில் அவரது மகளை பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் மாணவியை காரில் கடத்திச் செல்ல முற்பட்டபோது அவரிடம் இருந்து மாணவி தப்பி ஓடி உள்ளார். மாணவி துரத்திச் சென்று ரஜினிஸ் குட்டன் வாகனத்தில் வீல்ஸ்பேனர் கொண்டு அவரின் பின் தலையில் தாக்கியதால் மாணவி மயக்கம் அடைந்த நிலையில் மாணவியை பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாக்கியுள்ளார் மேலும் மயக்க நிலையில் இருந்த மாணவி கழுத்தை நெரித்ததால் மாணவி உயிரிழந்துள்ளார் இந்த வழக்கில் ரஜினிஸ் குட்டன் மீது பைக்காரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு கடந்த ஒரு வருடமாக வழக்கு நடந்து வந்தது இந்த வழக்கில் இன்று 12/4/2024 உதகை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ரஜினிஸ் குட்டன் குற்றவாளி என அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனையும் ரூபாய் 53,000 அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திரு ஸ்ரீதரன் அவர்கள் தீர்ப்பு வழங்கினார் மாணவி உயிரிழந்த சம்பவம் நடந்து ஓராண்டிற்குள் வழக்கு முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த தீர்ப்பினால் பொதுமக்களிடையே நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற அதிரடி தீர்ப்புகளும் தண்டனையும் அதிகப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற குற்றவாளிகளின் எண்ணிக்கையும் குறையும் நீதிமன்றத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வளரும்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment