ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் கடந்த மூன்று நாட்களாக அரசாங்க விடுமுறையால் உதகை நகரமே சுற்றுலா பயணிகள் வருகையால் நிரம்பி வழிந்தது அதிலும் குறிப்பாக இன்று 12 .4. 2024. வெள்ளிக்கிழமை அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்து குவிந்தது இதனால் ரோடுகளில் வாகனங்கள் இருபுறமும் வரிசை கட்டி நின்றது.
குறிப்பாக பொட்டானிக்கல் கார்டன் சாலை ரோஸ் கார்டன் சாலை தொட்டபெட்டா சாலையில் வாகனங்கள் வரிசையாக நின்றது. மேலும் படகு இல்லத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம் முதல் கஸ்தூரிபாய் காலனி வரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் வலது புறமும் இடது புறமும் நின்று கொண்டிருந்தன இதனால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும். மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை தாலுகா செய்தியாளர் விஜயராஜ் மற்றும் தமிழக குரல் நீலகிரி இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment