நீலகிரி மாவட்டம் தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலர் விவசாயிடம் ரூபாய் 6000 லஞ்சம் பெற்றதற்காக கைது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 April 2024

நீலகிரி மாவட்டம் தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலர் விவசாயிடம் ரூபாய் 6000 லஞ்சம் பெற்றதற்காக கைது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி...

 


நீலகிரி மாவட்டம் தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலர் விவசாயிடம் ரூபாய் 6000 லஞ்சம் பெற்றதற்காக கைது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி...


ஊட்டி தாலூக்கவுக்கு உட்பட்டது தும்மனட்டி கிராமம். இந்த இந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் கற்பகம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு அனுபோக சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றுள்ளார். அதற்கு அவர் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். எதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ரசாயன பவுடர் தோய்க்கப்பட்ட பணம் ரூபாய் 6 ஆயிரத்தை அந்த விவசாயியிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலருக்கு கொடுக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அவர் கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்தை சந்தித்து இரசாயன பவுடர் பூசப்பட்ட பணத்தை கொடுத்துள்ளார் அவர் அந்த பணத்தை வாங்கும்போது மறைந்திருந்த நெஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர் .மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கார் டிரைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad