நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலைய பகுதியில் டிஎஸ்பி திருமதி விஜயலட்சுமி தலைமையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 April 2024

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலைய பகுதியில் டிஎஸ்பி திருமதி விஜயலட்சுமி தலைமையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு

 


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலைய பகுதியில் டிஎஸ்பி திருமதி விஜயலட்சுமி தலைமையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு



நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  மஞ்சூர் பஜார் பகுதியில்இன்று 06.04.24 டிஎஸ்பி திருமதி விஜயலட்சுமி மஞ்சூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திரு சிவகுமார்  எஸ்ஐ சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் வெளி மாநிலத்தை  (குஜராத்) சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மஞ்சூர் பஜார் பகுதியில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பதட்டத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு  நடத்தினர் இந்த அறிவிப்பு மூலம் பொது மக்களுக்கு மஞ்சூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆயுதங்களுடன் தயாரான நிலையில் உள்ளார்கள் எனவே யாருக்கும் அஞ்சாமல் தங்களது ஜனநாயக குடியுரிமையை செயல்படுத்த தாங்கள் 100% வாக்கினை  செலுத்த வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது இதற்கு மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர் இதனால் எங்களுக்கு எந்தவித ஒரு ஐயப்பாடும் இன்றி நாங்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க எங்களுக்கு மன தைரியத்தை கொடுக்கிறது ஆகவே இது போன்ற காவல் துறையினர் ஒத்துழைப்பால் நாங்கள் ஜனநாயக முறைப்படி 100% வாக்கினை அளிப்போம் என மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad