நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு : 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து வாக்களித்த மக்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 April 2024

நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு : 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து வாக்களித்த மக்கள்





நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி பகுதியில் உள்ள உப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  நெல்லியாளம் நகரட்சி 1, மற்றும் 19 வார்டுகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.காலை முதல் வாக்குபதிவு விருவிருப்பாக நடைபெற்ற நிலையில் 11 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடிர் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்தவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாக்களிக்க வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். வாக்களிக்க வந்தவர்களில் சிலர் இயந்திர கோளாறு என்றதும் ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.



              பின்பு மற்றொரு வாக்கு பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது..

நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad