இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வேட்பாளர் திரு லோகேஷ் தமிழ் செல்வன் அவர்களுக்கு மிக சிறப்பாக அளித்தனர். இவ்விழாவிற்கு வருகை தந்த எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை அஇஅதிமுக தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இக்கூட்டத்தில் பேசும் பொழுது அவர் நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலையை பெற்று தருவதாகவும், கூடலூர் தொகுதியில் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகவும் , மார்க்கெட் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகவும், நீலகிரி மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தருவதாகவும் தனது பிரச்சாரத்தில் வாக்கு அளித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொரடா எஸ் பி. வேலுமணி அவர்களும், மற்றும் மாவட்டக் கழக செயலாளர் டி. கப்பச்சி அவர்களும் கே ஆர் அர்ஜுனன் அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை உதகை நகர செயலாளர் கா. சண்முகம், உதகை நகர நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார், உதகை செய்தியாளர் விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment