நீலகிரி மாவட்டம் உதகை நகரில் பல இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால். பள்ளி செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 March 2024

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் பல இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால். பள்ளி செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

 


நீலகிரி மாவட்டம் உதகை  நகரில் பல இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால். பள்ளி செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். 

உதகை நகரின் சேரிங்கிராஸ் பகுதியில் இன்று மாலை சுற்றித்திரிந்த நான்கு ஐந்து ஆடு மாடுகளால் பொதுமக்களும் பள்ளி சென்று பள்ளி முடித்து விட்டு வந்த குழந்தைகளும். வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள் பிறகு நானும் காவல்துறையை சேர்ந்த நண்பரும் சேர்ந்து அந்த மாடுகளை  அப்புறமாக விரட்டினோம் அப்பொழுது தான் சிறிது சிறிதாக ஒதுங்கி சென்றது. மேலும் கால்நடைகள் விரட்டினாலும் அதன் கொம்புகளால் மக்களை தாக்கினாலும். பாதிப்பு என்னவோ பொது மக்களுக்கு தான். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து. கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே கால்நடைகளை ரோடுகளில் விடுவதை தவிர்ப்பார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து. நடவடிக்கை எடுக்க வேண்டுமாய். தமிழக குரல்  செய்தி  குழுமத்தின் மூலமாகவும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 



தமிழக குரல் செய்திகளுக்காக உதகையிலிருந்து உ விஜயராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad