தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை சமுதாய கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 March 2024

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை சமுதாய கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை  சமுதாய கூடத்தில் இலவச கண் பரிசோதனை  முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது  இதில் 160க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அத்துடன் 44 பயணிகள் இலவச கண்ணாடிகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர் இந்த நிகழ்வினை நமது தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார் இலவச கண்ணாடிகளை வழங்கினார் மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பரிந்துரை கடிதமும் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரலாய் கலந்து கொண்டனர்... இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது 

பொதுமக்களிடம் இதைப் பற்றி கருத்து கேட்கும் பொழுது இந்த கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்த பரிசோதனை முகாம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது இதுபோன்று இன்னும் பல பகுதிகளில் இதுபோன்ற முகாம் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் 

அதையும் மனமகிழுவுடன் ஏற்றுக் கொண்ட நமது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அவர்கள் மேலும் இப்பதிகளை சுற்றி பல பகுதிகளில் இதுபோன்ற முகாம்களும் மருத்துவ முகாம்களும் இனி வருகின்ற நாட்களில் நடத்த ஆவணம் செய்வோம் என உறுதி அளித்தார் மேலும் இந்த மாதத்திற்குள் நமது நீலகிரி மாவட்டத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கண்ணாடிகள் மற்றும் பரிசோதனையும் செய்யும் ஆவணம் செய்வோம் என உறுதி ஏற்ப்போம் இது என்னால் மட்டும் இயலாது இங்குள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து இதற்கான உறுதியை இன்று ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்  இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்... 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad