எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் ஆண்டுவிழா நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 9 March 2024

எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் ஆண்டுவிழா நடைபெற்றது


எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா 9-3- 2024 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர், கே .சுஜாதா அவர்கள் வரவேற்றுப் பேசினார். 2023 -2024 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் வாசித்தார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய சகோதரி முனைவர் வி ஜே. ஷீலா, கல்லூரி முதல்வர், பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி, குன்னூர் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். முனைவர் திருமதி. ரோசில்டா  மஞ்சு ஆங்கிலத்துறைப் பேராசிரியர் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் .சிறப்பு விருந்தினர் சகோதரி முனைவர். வி .ஜே .ஷீலா அவர்கள் விழா சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் கல்வி என்பது நமக்கானதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பயன்பட வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது. கல்வி நமக்கு தன்னம்பிக்கையும், சுயநலமற்ற அன்பையும் தருகிறது என்று கூறினார். மதிப்பெண் அடிப்படையிலும், பல்வேறு திறமைகளின் அடிப்படையிலும் மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், காசோலையும் வழங்கப்பட்டது . A.ஆஃபியா,  முதல் பரிசு (BSC, விலங்கியல் துறை,) எஸ் .சுமிதா இரண்டாம் இடம் (BSC விலங்கியல் துறை )நான்காவது இடம் K.K.சஹானா ஷெரின்,  (BSCவிலங்கியல் துறை) J.ரோஷினி, இரண்டாம் இடம் M.Com,) A.நிகிதா, நான்காவது  இடம் M.Com)

J. டெல்பின் தருணா,ஏழாம் இடம் M.Com. தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருமதி எஸ் .வி. ஹேமலதா கணிதத்துறைப் பேராசிரியர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இறுதியில் நாட்டுப் பண்னுடன் விழா இனிதே முடிவுற்றது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி  மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad