நீலகிரி மாவட்டம் சுண்டட்டி ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ளது சுண்டட்டி கிராமம் ஆகும் அருகே கொட்டநள்ளி பாமுடி சேலக்கொரை நெடுகுளா ஆகிய கிராமங்கள் அடர்த்தியாக அருகருகே உள்ள இடமாகும்
இன்று காலை குட்டிகளுடன் ஆறு யானைகள் சுண்டட்டி கிராமத்தில் புகுந்து உணவுதேடி சென்றது மற்றும் விவசாய நிலத்தை தாண்டி சென்றது
சுண்டட்டி ஊர்மக்கள் ஆச்சரியமடைந்ததுடன் மிகவும் அச்சமடைந்தனர்
வனத்துறையினர் கூறுகையில் வறட்சியான கால நிலையால் வனப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் தேடி ஊருக்குள் வந்துவிட்டதாக தெரிவித்தனர்
வறட்சியான காலங்களில் வனப்பகுதியில் உரிய தண்ணீர் வசதி செய்தும் வனப்பகுதி அருகே நீர் திருட்டு நடைபெறுவதை தடுத்தும் ஏற்கனவே சிறுத்தை மற்றும் புலி ஆகியவை குடியிருப்பு பகுதிகளில் இரவில் வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கும் நிலையில் யானை கூட்டம் ஊருக்குள் வருவது அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
வனத்துறையினர் அதிக அளவு திட்டமிட்டு யானை கூட்டம் மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment