உதகை மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர்விழா தொடக்கம் பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் பக்தி பரவசம்
நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு தேர்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது
கணபதி ஹோமம், நவகலச பூஜை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பூரதம் புறப்பாடுடன் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நடைபெற்றது இதை தொடர்ந்து 18ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
முக்கியமாக ஆதிபராசக்தி, துர்க்கை, கொடுங்களூர் அம்மன், ராஜகாளியம்மன், ஹெத்தையம்மன், மகா மாரியம்மன் உள்பட பல்வேறு அலங்காரத்துடன் வாகனங்களில் எழுந்தருளிகிறார்.
வருகிற ஏப்ரல் 12ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 16ம் தேதி மதியம் 1.55 மணிக்கு நடக்கிறது
நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோயிலாக ஊட்டி மாரியம்மன் கருதப்படுகிறது, ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயமான இதில், 36 நாள்கள் பிரம்மோற்சவம் நடக்கும் அபூர்வ ஆலயமாகத் திகழ்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், கோயில் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
ஒரு மாதம் நடக்கும் இத்திருவிழாவின்போது, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பர்ய முறைப்படி அம்மனுக்கு அலங்காரம்செய்து தேர்பவனி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா, கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது
பங்குனி மாதம் தொடங்கி, சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமையன்று தேரோட்டம் நடைபெறும். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தார், ஆன்மீக அமைப்புகள், உபயதாரர்கள் ஆகியோர் சார்பில் நாள்தோறும் அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதில் அம்மன் ராஜகாளியம்மனாக, பகவதியாக, ஹெத்தையம்மனாக, பராசக்தியாக, ராஜராஜேஸ்வரியாக, துர்க்கையாக என பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் வலம் வருவார்
முதல் நாள் தொடக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் தேர்த் திருவிழா நடந்தது. இதில் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது. இதை திரளான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
தேர்த்திருவிழாவில் மாரியம்மன் புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கண்கவர் கலை நிகழ்வுகளுடன் இந்த பக்தி பரவச நிகழ்வை ஒக்கலிகர் சமுதாய மக்கள் ஒன்றினைந்து மிக சிறப்பாக செய்து இருந்தனர் .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட புகைப்படக் கலைஞர் என் .வினோத் குமார். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment