நீலகிரி மாவட்டம் உதகை நகரில் 19:3:2024. செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி அளவில். குன்னூரில் இருந்து உதகை யை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று. நொண்டி மேடு செல்லும் சாலை யின் அருகே அமைந்துள்ள சத்துணவு கூடத்தின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளை ஏற்ற பஸ்ஸை ஓட்டுனர் நிறுத்தினார். பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது. பின்னால் வந்து கொண்டிருந்த மாருதி ஆல்டோ கார் ஒன்று அரசு பஸ்ஸின் வலது புற பின்னால் பக்க ஓரத்தில் மோதி நின்றது. உடனே பஸ்சின் ஓட்டுனரும் நடத்துனரும். கீழே இறங்கி சென்று பார்த்தனர். உடனே பேருந்தின் ஓட்டுநர் தன்னுடைய மொபைல் போனில் தான் இயக்கி வந்த பஸ்ஸின் பின்னால் மோதிய. காரின்போட்டோக்கள் எடுத்தார். பின்னர் தன் மீதுதவறில்லை என்று கண்ட ஓட்டுநர் தன்னுடைய மொபைலில் எடுத்த போட்டோக்களுடன் ஓட்டுனரும் நடத்துனரும் சென்று விட்டார்கள். மேலும் அருகில் சென்று பார்த்த போது. காருக்குத்தான் சேதம் அதிகம். நல்வாழ்த்துக்கள் காரில் வந்தவர்களுக்கு எந்த ஒரு சிறு காயங்கள் இன்றி தப்பினார்கள் . பின்னால் வந்த கார் இன்னும் வேகமாக வந்திருந்தால். பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது. எனவே சாலையில் இரண்டு மூன்று நான்கு சக்கர வாகனங்களையும் கனரக வாகனங்களையும். இயக்கும் ஓட்டுநர்கள் சிந்தனை சிதறாமல் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு. கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் தங்களை நம்பி. தங்களுடைய உறவினர்களும் குடும்பத்தாரும். மனைவி பிள்ளைகளும் உள்ளனர். இதை நினைவில் கொண்டு வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிலையில்லாத இந்த வாழ்க்கையில். நிதானமாக வாகனங்களை இயக்கினால். நாம் உயிர் வாழும் காலம் வரையில். விபத்துகளைதவிர்த்தும் உடல் ஊனத்தை தவிர்த்தும். உயிர் பலிகளை. தவிர்க்கும் சந்தோசமாக வாழலாம். ஏனென்றால் தங்களை நம்பி பெற்றோர்களும். நம்பி வந்த மனைவியும் நம்பி இருக்கின்ற பிள்ளைகளும். தங்களின் . நல் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே வாகனங்களை இயக்கும் பொழுது பரபரப்பு இல்லாமலும் சிந்தனையை சிதறவிடாமலும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்காமலும். இருக்கவும். உயிர் பலிகளை தவிர்த்து உற்சாகத்துடன் வாழவும். அனைத்தும் வாகன ஓட்டுனர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் ஊடக செய்திகளுக்காக. செய்தியாளர் உ விஜயராஜ். நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment