தமிழக குரல் செய்தியின் எதிரொலி...
நீலகிரி மாவட்டம் உதகை மணிகண்டில் பகுதியில் இருந்து ஊட்டி காபி ஹவுஸ் செல்லும் நடைபாதையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாதாள சாக்கடை அடைத்து கழிவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்று தமிழக குரல் இணைய செய்தியின் மூலம் செய்தி வெளியிட்டு இருந்தோம் அதிலும் செய்தி நேற்று மாலை நேரத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது
நமது இணையதள செய்தியின் எதிரொலியாக இன்று திங்கட்கிழமை காலையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் வந்து அடைப்பை சரி செய்து கொண்டிருந்தனர்
செய்தியின் எதிரொலியாக உடனடி நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கும் இந்த செய்தியை அதிகாரிகள் வரை கொண்டு சேர்த்த நமது தமிழக குரல் வாசகர்களுக்கும் அனைத்து இணையதள குழுவினருக்கும் இந்த செய்தியை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த நமது தமிழக குரல் உதகை செய்தியாளர் விஜயராஜ் அவர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் நீலகிரி மாவட்ட பொதுமக்கள் சார்பாகவும் சுற்றுலா பயணிகள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல். இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment