நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 8-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆட்டோ டிரைவர்கள் மட்டும் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி அனுமதி இன்றி நடத்திய உண்ணாவிரதத்தால் அனைவரும் கைது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 15 March 2024

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 8-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆட்டோ டிரைவர்கள் மட்டும் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி அனுமதி இன்றி நடத்திய உண்ணாவிரதத்தால் அனைவரும் கைது

 


நீலகிரி மாவட்டம்   உதகையில் கடந்த 8-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆட்டோ டிரைவர்கள் மட்டும் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி அனுமதி இன்றி நடத்திய உண்ணாவிரதத்தால் அனைவரும் கைது

நீலகிரி மாவட்டம்   உதகையில் கடந்த 8-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆட்டோ டிரைவர்கள் மட்டும் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி 8-ம் தேதி மதியம் முதல் மாலை வரை ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை பின்பு 9-ம் தேதி சனிக்கிழமை  முதல் பன்னிரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை வரையில் ஆட்டோக்கள்  ஓடின மீண்டும் புதன்கிழமை முதல் இன்று வியாழக்கிழமையும் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை ஏனென்றால் தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே உயர் நீதிமன்றம் அவர்களுக்கு கொடுத்த 15 கிலோமீட்டர் வரையில் ஆட்டோக்களை இயக்கலாம்  என்ற  நீதிமன்ற தீர்ப்பினை அவர்கள் மதித்து ஆட்டோக்களை இயக்கி வந்தார்கள் ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் அவர்கள் இவர்களுக்கு பாதகமாக செயல்பட்டு வருகிறார் என்பதனை பல ஆட்டோ ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் தெரிவிக்கிறார்கள் அதனால் இன்று 14.03.2024 வியாழக்கிழமை காலையில் மத்திய பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதம்  இருக்கிறோம் என்று காவல்துறையை அணுகி கேட்டுள்ளனர் ஆனால் அதற்கு அவர்கள் அனுமதி மறுத்துள்ளனர் ஆனாலும் ஆட்டோ டிரைவர்கள் ஓட்டுநர்களும் காவல்துறையின்  அனுமதியை மீறி இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு தரையில்  அமர்ந்திருந்தார்கள் அவர்களை 11 45 மணிக்கு காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர் எனவே இந்த  ஆட்டோ டிரைவர் மட்டும் ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளையும் அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்து ஆட்டோ டிரைவர்கள் உரிமையாளர்கள் வாழ்விற்கும் வாழ்வாதாரத்திற்கும் நல்லதொரு  தீர்வை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad