நீலகிரி மாவட்ட உதகை மரவியல் பூங்கா அருகில் மதில்சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் மண்ணில் புதைந்தனர் இருவரும் உயிருக்கு பாதிப்பான நிலையில் மருத்துவமனையில் அனுமதி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 13 March 2024

நீலகிரி மாவட்ட உதகை மரவியல் பூங்கா அருகில் மதில்சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் மண்ணில் புதைந்தனர் இருவரும் உயிருக்கு பாதிப்பான நிலையில் மருத்துவமனையில் அனுமதி


நீலகிரி மாவட்ட உதகை மரவியல் பூங்கா அருகில் மதில்சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் மண்ணில் புதைந்தனர் இருவரும் உயிருக்கு பாதிப்பான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மரவியல் பூங்கா அருகே தனியார் கட்டுமான பணியில் மதில் சுவர் கட்டுவதற்காக மண் எடுக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது அதில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இன்றைய தினம் காலையில் வழக்கம்போல் வட மாநில தொழிலாளர்கள் மண்ணெடுக்கும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக மன்சுவர் சரிந்து விழுந்துள்ளது இதில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர் அவர்களை மீட்கும் பணியில்  காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் வட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாக அந்த கட்டுமான இடத்திற்கு வந்து ஜேசிபி உதவியுடன் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் இருவரும் உயிருக்கு பாதிப்பான நிலையில் அனுமதிக்கப்பட்டனர் அதில்  1. திரு ரிஸ்வான்.வயது.26 2. ஜாகீர் வயது 20. ஜார்க்கண்ட் மாநிலத்தவர்கள் அதில் ரிஸ்வான் வயது 26 எனும் வடமாநில தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது... 

குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால் தான் மண்ணரிப்பு ஏற்படும்  இடங்களுக்கும் அனுமதி கொடுக்காமல்  இருந்தனர் அதையும் மீறி இது போன்ற ஒரு சில இடங்களில் அனுமதி இல்லாமலும் சட்டத்திற்கு புறம்பாகவும் இது போன்ற வேலைகள் செய்வதால் இது போன்ற விபரீதங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது 

அதிலும் குறிப்பாக கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் உதகை அருகே காந்தி நகர் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக உதகைப்பகுதியில் அரங்கேறியுள்ளது ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு இதுபோன்று எந்தெந்த பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளார்களோ அவர்களின் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட பொதுமக்கள் சார்பாகவும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம் இது போன்ற சட்ட நடவடிக்கைகள் கடுமையாக தொடர்ந்தால் மட்டுமே மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற விபரீதங்களும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்... 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் உதகை நகர செய்தியாளர் வலன்விமல் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad