சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சார்ந்த சுமார் 70 ஆசிரியர்கள் 12வது நாளாக முற்றுகைப் போராட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 3 March 2024

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சார்ந்த சுமார் 70 ஆசிரியர்கள் 12வது நாளாக முற்றுகைப் போராட்டம்


சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சார்ந்த சுமார் 70 ஆசிரியர்கள் 12வது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க நீலகிரி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் திரு தண்டபாணி மாவட்ட பொருளாளர் திரு அருண் பிரபு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி சித்ராணி ஆகியோர் போராட்டத்தை வழி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உதகையில் உள்ள சிறுவர் மன்றத்தில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் காவல்துறை வழங்கிய மதிய உணவை மறுத்து சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வாக்குறுதி எண் 311 ன் படி 20000 ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இந்த ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad