உதகை 34 வார்டு நொண்டி மேடு பகுதியில்பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நடைபாதையை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 4 March 2024

உதகை 34 வார்டு நொண்டி மேடு பகுதியில்பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நடைபாதையை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்


உதகை 34 வார்டு நொண்டி மேடு பகுதியில்பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நடைபாதையை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

 நீலகிரி மாவட்டம் உதகை நகரம்   34 ஆவது வார்டு நொண்டி மேடு பகுதியில். பொதுமக்கள் அன்றாடம்  பயன்படுத்தும் நடைபாதை மிகவும் பாழ் அடைந்த நிலையில் உள்ளது.



 இந்தப் பாதை பழுதடைந்து பல வருடங்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகமும் நகர்மன்ற உறுப்பினரும். கண்டுகொள்ளாத நிலை உள்ளது மேலும்  நடைபாதின் அருகில் உள்ள வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் உணவு கழிவுகளையும். குப்பைகளின் நடைபாதில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். 



இதனால் பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளும் நடந்து சென்று வருபவரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.   இந்த வழிப்பாதை நொண்டி மேடு முதல் ஹெச் எம் டி வரை செல்லும். குறுக்கு வழி பாதை ஆகும் இந்த வழிப் பாதையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக. சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும் நிர்வாகமும் தலையிட்டு. இந்த பாதையின் பழைய அகலத்தை அளவிட்டு. இந்த பாதியை சரிவர செப்பனிட வேண்டும் என்று தமிழக குரல் செய்திகள் மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.



 தமிழக குரல் செய்திகளுக்காக   உதகை தாலுக்கா செய்தியாளர்  உ விஜயராஜ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad