எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் 53 வது விளையாட்டு விழா 1-03- 2024 அன்று மலைவள மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 2 March 2024

எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் 53 வது விளையாட்டு விழா 1-03- 2024 அன்று மலைவள மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது

 


எமரால்டு  ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் 53 வது விளையாட்டு விழா 1-03- 2024 அன்று மலைவள மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர். சுஜாதா அவர்கள் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பிற்குப் பிறகு ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திரு .கே. சங்கர்,( மூத்த மேலாளர் இந்தியன் வங்கி உதகை) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் விளையாட்டும், கல்வியும் நமக்கு இரு கண்கள் ,உறுதியான உடல் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும். உறுதியான உடலில் மட்டுமே தெளிவான மனம் அமையும். பெண்கள் இன்று பல துறைகளில் சாதிக்கிறார்கள். விளையாட்டுத் துறையிலும் சாதிக்க வேண்டும் .இன்றைய சூழலில் விளையாட்டு மிகவும் அவசியம்" என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும்,   4*100  மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயமும் நடத்தப்பட்டது .செல்வி. அஸ்வினி (மூன்றாம் ஆண்டு கணிதத் துறை) யோக கலையையும், செல்வி .நசீரா( முதலாம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் துறை )சிலம்ப கலையையும் சிறப்பாக செய்து காட்டினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன .முனைவர் .அகிலா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அவர்கள் 2023 - 2024 ஆண்டு அறிக்கை வாசித்தார். மாணவிகளின் கூட்டு உடற்பயிற்சி நிகழ்வுளும் நடத்தப்பட்டது. 

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் திரு. கே.சங்கர் அவர்கள் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.  இவ்விழாவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அனுசுயா ,முதலிடம்   (இரண்டாம் ஆண்டு  விலங்கியல் துறை )கீர்த்தனா, இரண்டாம் இடம் (மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப ம்)ரிஹானா, ( மூன்றாம் இடம்) முதலாம் ஆண்டு ப தகவல் தொழில்நுட்பம்)    தனிநபர் சாம்பியன்ஷிப் சுஷ்மிதா,( மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி விலங்கியல் துறை) அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் அனைத்து துறை பேராசிரியர்களும்,  மாணவிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் R .கவிதா, காயத்ரி, தேவி,  வாணி வாணி, மற்றும் டாக்டர். M. C. நிஷா, டாக்டர் B  கல்பனா, டாக்டர் சொர்ணலதா, டாக்டர் M.விசாலாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமதி. வாணி உதவிப்பேராசிரியர், (கணிப்பொறி அறிவியல் துறை) அவர்கள் நன்றியுரை வாசித்தார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்

No comments:

Post a Comment

Post Top Ad